நானியின் புதிய படத்தில் இணையும் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் நானியின் புதிய படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Priyanka mohan, sj suryah, nani
Priyanka mohan, sj suryah, naniPT

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் நானி. தற்போது, இவர், ஹாய் நான்னா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சவுரவ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. அப்பா - மகள் பாசத்தை மையக்கருவாக வைத்து படம் தயாராகி வருகிறது..

Nani priyanka mohan
Nani priyanka mohanpt desk

இந்த நிலையில், நடிகர் நானியின் 31-வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அடடே சுந்தரா படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் மீண்டும் அவர் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தில் பிரியங்கா மோகன் இருப்பதை உறுதி செய்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு வெளியான கேங்க் லீடர் திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்த நிலையில், மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். அத்துடன் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com