“அம்மாவிடம் சொல்ல தயங்கினேன்” - 'ஜீனியஸ்' பிரியா லால்

“அம்மாவிடம் சொல்ல தயங்கினேன்” - 'ஜீனியஸ்' பிரியா லால்
“அம்மாவிடம் சொல்ல தயங்கினேன்” - 'ஜீனியஸ்' பிரியா லால்

'ஜீனியஸ்' படத்தின் கதாநாயகி பிரியா லால் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் 'ஜீனியஸ்'. இப்படம் இந்த மாதம் 26ம் தேதி இப்படம் வெளிவருகிறது. இதில் நாயகியாக நடித்துள்ள பிரியா லால் தனது படப்பிடிப்பு அனுபங்களை கூறியுள்ளார்.  

மலையாளத்தில் முதல் படம் 'ஜனகன்'. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம்.

இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது.  'ஜீனியஸ்' படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒருவரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன். 

'வெண்ணிலா கபடி குழு',  'நான் மகான் அல்ல', 'ஜீவா', 'பாண்டியநாடு' போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின். நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்தக் கதாப்பாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன்.

இப்படத்தில் நான் நடித்த முதல் காட்சி க்ளைமாக்ஸ்தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனை கூட அந்தக் கதாபாத்திரத்தைக்  கெடுத்துவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். அதேபோல் சுசீந்திரனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்வார். இப்படிதான் நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே பின்பற்றுவேன். 

மேலும், பல பேருக்கு இந்தப்படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது.

நீண்ட நாட்களாக ஒரு கனவு,  தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று.  பாட்டு, நடனம், நடிப்பு  போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால் அம்மாவிடம் சொல்ல தயங்கினேன். ஆனால் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர் எனக் கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com