’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த நடிகை பூர்ணா!

’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த நடிகை பூர்ணா!
’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த நடிகை பூர்ணா!

’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா நடிக்கவிருக்கிறார்.

மோகன்லால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ‘த்ரிஷ்யம் 2’ ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்தையும் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்களும் திரை பிரபலங்களும். இரண்டாம் பாகமும் வெற்றியடைந்ததால், உடனடியாக தெலுங்கு ‘த்ரிஷ்யம் 2’ அறிவிப்பு வெளியானது. முதல் பாகமான த்ரிஷ்யம் படத்தை தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். அங்கும் வெற்றி கண்டது. தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஸ்ரீப்ரியா அரசியல் பணிகளை கவனித்து வருகிறார்.

இதனால், தெலுங்கு ரீமேக்கை ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார். வெங்கடேஷ் – மீனா நடிக்கிறார்கள். இந்நிலையில், இன்று ’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது. இதில், நடிகை பூர்ணா இன்று முதல் கலந்துகொண்டார்.

’த்ரிஷ்யம் 2’ படத்தில் மோகன்லால் விடுதலையாக அழுத்தமான வாதங்களை முன்வைத்து வழக்கறிஞராக வந்து நடிப்பில் ஈர்த்தார் நடிகை சாந்தி பிரியா. அவர் வேடத்தில்தான், பூர்ணா வழக்கறிஞராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்று அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com