தேவகவுடா கட்சியில் மீண்டும் சேர்ந்தார் பூஜா காந்தி!

தேவகவுடா கட்சியில் மீண்டும் சேர்ந்தார் பூஜா காந்தி!

தேவகவுடா கட்சியில் மீண்டும் சேர்ந்தார் பூஜா காந்தி!
Published on

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளக் கட்சியில் மீண்டும் சேர்ந்துள்ளார் நடிகை பூஜா காந்தி.

தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ’கொக்கி’, சரத்குமார் நடித்த, வைத்தீஸ்வரன், அர்ஜூன் நடித்த ’திருவண்ணாமலை’ படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. பிறகு கன்னடப் படத்தில் நடிக்கத் தொடங்கிய அவர், அங்கு முன்னணி நடிகையாக உள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதாள தளம் கட்சியில் சேர்ந்தார். பிறகு அதில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2013-ல் பிஎஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ரெய்ச்சூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில் அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ள பூஜா காந்தி, இப்போது ஜனதா தளம் கட்சியில் மீண்டும் சேர்ந்துள்ளார். இந்தக் கட்சியின் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com