actress pavithra lakshmi breaks silence on health rumors
பவித்ரா லட்சுமிx page

”எனக்கு நோயா? வதந்தி பரப்பாதீங்க” - நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்

தன்னுடைய உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
Published on

தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர், ஓகே கண்மணி, நாய் சேகர், உல்லாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிருக்குப் போராடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த நிலையில் இதுகுறித்து நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

actress pavithra lakshmi breaks silence on health rumors
பவித்ரா லட்சுமிஎக்ஸ் தளம்

இதுதொடர்பாக அவர், “என்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. நான் எந்த பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. அதேபோல் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு எந்தச் சிகிச்சையும் பெறவில்லை. தயவுசெய்து சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பாதீர்கள். வெறும் பொழுதுபோக்குக்காக ஒருவரின் பெயரையும் எதிர்காலத்தையும் அழிக்காதீர்கள். எனக்கும் ஓர் எதிர்காலம் உள்ளது. உங்கள் சொந்த குடும்பத்திற்கு நீங்கள் செய்ய விரும்பாததை, தயவுசெய்து மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்” என அவரைப் பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com