\
சமூக வலைத்தளங்களில் அவதூறு: இளைஞர் மீது நடிகை பார்வதி புகார்

சமூக வலைத்தளங்களில் அவதூறு: இளைஞர் மீது நடிகை பார்வதி புகார்

சமூக வலைத்தளங்களில் அவதூறு: இளைஞர் மீது நடிகை பார்வதி புகார்
Published on

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக இளைஞர் ஒருவர் மீது நடிகை பார்வதி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

தமிழில், பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பார்வதி. இவர் இளைஞர் ஒருவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கிஷோர் என்பவர் தனது குடும்பத்தை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வருகிறார் என்றும், சமூகவலைத்தளங்களில் தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக எழுதி வருவதாகவும் கூறியுள்ளார்.

‘புகார் வந்திருப்பது உண்மைதான். 2 நாட்களுக்கு முன் புகார் வந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர். மேலதிக விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com