\
சூரியின் நடனம்... நிவேதா ஆச்சரியம்!

சூரியின் நடனம்... நிவேதா ஆச்சரியம்!

சூரியின் நடனம்... நிவேதா ஆச்சரியம்!
Published on

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. தளபதி பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். 

வரும் 11-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படம் பற்றி நிவேதா பெத்துராஜ் கூறும்போது, ’இது எனக்கு இரண்டாவது படம். கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். ’சிங்கக்குட்டி’ என்ற பாடலில் சிறப்பாக நடனம் ஆடியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்துக்காக தினேஷ், ஷோபி, பிருந்தா ஆகிய மாஸ்டர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நடனத்தில் என்னை வியக்க வைத்தவர்
காமெடி நடிகர் சூரிதான். நாங்கள் ஒரு பக்கம் பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தால் சூரி அதை கண்டுகொள்ளவே மாட்டார். ஆனால், ஷாட்டுக்கு வந்தால் கரெக்டாக ஆடி, பாராட்டு பெறுவார். கேமராமேன் பாலசுப்ரமணியெம் படத்தில் என்னை அழகாகக் காட்டியிருக்கிறார். பார்த்திபன் சார் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார். இருந்தாலும் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நேரம் கிடைக்கும்போது,
ஏதாவது சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பார். இது ஜனரஞ்சகமான படம். நல்ல மெசேஜும் இருக்கிறது’ என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com