கிளிமாஞ்சரோ மலையில் ஏறிய நடிகை நிவேதா தாமஸ்: தேசியக்கொடியுடன் பெருமிதம்
ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவில் நடிகை நிவேதா தாமஸ் ஏறியுள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத்தொடர்ந்து, விஜய்யின் ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். சமீபத்தில் இவரது நடிப்பில்‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ வெளியானது.
இந்த நிலையில், நிவேதா தாமஸ் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான 5.895 அடி மீட்டர் கொண்ட கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார். இதற்காக, 6 மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் இந்திய தேசியக்கொடியுடன் நிவேதா தாமஸ் கிளிமஞ்சாரோவில் நிற்கும் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.