கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நிக்கி கல்ராணி: மருத்துவ பணியாளர்களுக்கு நெழ்ச்சியோடு நன்றி

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நிக்கி கல்ராணி: மருத்துவ பணியாளர்களுக்கு நெழ்ச்சியோடு நன்றி
கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நிக்கி கல்ராணி: மருத்துவ பணியாளர்களுக்கு நெழ்ச்சியோடு நன்றி

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை நிக்கி கல்யாணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அத்தகவலை, அவரே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்திருக்கிறார்.

’டார்லிங், கடவுள் இருக்கான் குமாரு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைககரன், சார்லி சாப்ளின் 2 போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை நிக்கி கல்ராணி.  டார்லிங் படத்தில் பேயாக வந்து பயமுறுத்தியவர், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அதிரடி காட்டும் போலீஸாகவும் மிரட்டினார். இந்நிலையில், உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா நிக்கி கல்ராணியையும் தொற்றிவிட்டது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கடந்தவாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். இப்போது எனது உடல்நலம் நன்றாக இருக்கிறது. எனது சிரித்த முகத்தைப் பார்க்கத் தேடிய எனது நெருங்கிய உறவினர்களுக்கு  நன்றி. தமிழகத்தின் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தமிழக அரசிற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com