\
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய நடிகை நிதி அகர்வால்

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய நடிகை நிதி அகர்வால்

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய நடிகை நிதி அகர்வால்
Published on

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட நடிகை நிதி அகர்வால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவ, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், மாணவர்கள், தொழில்துறையினர், திரைத்துறையினர் என பலத்துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்த நிதி அகர்வால் 1 லட்சம் ரூபாய் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நிதிஅகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com