\
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம்
Published on: 

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திருச்சிக்கு வந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.

இதையடுத்து தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலவழுத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 9-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து கிராம மக்களுடன் மண்பனையில் சக்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com