சினிமா
நாளை மதியம் ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’
நாளை மதியம் ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’
நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படம் நாளை மதியம் வெளியாகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம்.
‘நெற்றிக்கண்’ நாளை(ஆகஸ்ட் 13)-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவிருக்கிறது. படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். பெரும்பான்மையான படங்கள் தேதி தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்குக்குதான் ஓடிடியில் வெளியாகும். ஆனால், நெற்றிக்கண் படம் நாளை மதியம் 12.15 க்கு வெளியாகிறது.