\
சீரடி சாய் பாபா கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு

சீரடி சாய் பாபா கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு

சீரடி சாய் பாபா கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு
Published on

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.வரும் தீபாவளிக்கு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் வெளியாகிறது.

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com