நயன்தாரா நடிக்கும் ’கனெக்ட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நயன்தாரா நடிக்கும் ’கனெக்ட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நயன்தாரா நடிக்கும் ’கனெக்ட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா நடிப்பில்  கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. தற்போது அட்லீ – ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார். அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், இன்று நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ’கனெக்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திகில் படம் ‘மாயா’ படத்தையும் அஸ்வின் சரவணன் தான் இயக்கினார். தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘இரவாக்காலம்’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்டப் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com