ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்கிய நடிகை நயன்தாரா..!

ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்கிய நடிகை நயன்தாரா..!

ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்கிய நடிகை நயன்தாரா..!
Published on

கொரோனா நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூபாய் 20 லட்சம் வழங்கியுள்ளார்.


கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தை பொருத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம் 2.30 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சினிமாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முழுமுடக்கத்தால் சினிமாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஃபெப்ஸி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உதவ முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு நயன்தாரா 20 லட்சத்தை வழங்க முன்வந்துள்ளார். முன்னதாக நடிகர் ரஜினி 50 லட்சம் வழங்கியதும், விஜய் சேதுபதி 10 லட்சம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com