\
நடிகை நந்திதா தந்தை காலமானார்

நடிகை நந்திதா தந்தை காலமானார்

நடிகை நந்திதா தந்தை காலமானார்
Published on

நடிகை நந்திதாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.

‘அட்டக்கத்தி’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை நந்திதா ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ’எதிர்நீச்சல்’, ‘புலி’, ’இடம் பொருள் ஏவல்’,’உப்பு கருவாடு’, ‘அசுரவதம்’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதோடு, டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகி என பன்முகத் திறமை கொண்ட நந்திதா நடிப்பில் விரைவில் ‘எம்.ஜி.ஆர் மகன்’ வெளிவரவிருக்கிறது.

இந்த நிலையில், நடிகை நந்திதா தனது 54 வயதாகும் தந்தை சிவசாமி உயிரிழந்துவிட்டார் என்பதை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த காரணத்திற்காக இறந்தார் என்பதை குறிப்பிடவில்லை. நந்திதா கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com