சினிமா
’நமீதா தியேட்டர்ஸ்’ - புதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா!
’நமீதா தியேட்டர்ஸ்’ - புதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா!
’நமீதா தியேட்டர்ஸ்’ என்ற புதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகை நமீதா.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்த நடிகை நமீதா தற்போது பாஜகவில் இருந்துகொண்டே படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில், புதிய ஓ.டி.டி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
நமீதா தியேட்டர்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஓ.டி.டி. தளம் அடுத்த மாதம் முதல் செயல்படவுள்ளது. அந்த தளத்தில் உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிடவுள்ளதாக நடிகை நமீதா கூறியுள்ளார். இதன் மூலம் புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சிறு பட தயாரிப்பாளர்களும் தங்களின் படங்களை இந்த ஓ.டி.டி தளத்தில் வெளியிடலாம் என்று நமீதா கூறியுள்ளார்.