நடிகை முமைத்கான் கார் வாடகை பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்: ஓட்டுநர் குற்றச்சாட்டு

நடிகை முமைத்கான் கார் வாடகை பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்: ஓட்டுநர் குற்றச்சாட்டு
நடிகை முமைத்கான் கார் வாடகை பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்:  ஓட்டுநர் குற்றச்சாட்டு

’கோவாவுக்கு காரில் பயணம் செய்துவிட்டு வாடகைப் பணத்தை கொடுக்காமல் நடிகை முமைத்கான் ஏமாற்றிவிட்டார்’ என்று கார் ஓட்டுநர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் ‘நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே, விக்ரமின் கந்தசாமியில் ‘என் பேரு மீனா குமாரி, விஜய்யின் போக்கிரியில் ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’ என தமிழின் முன்னணி நடிர்களின் பாடல்களுக்கு சிறப்பு நடனமாடியவர் நடிகை முமைத்கான்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடித்து வருபவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். இவர்மீதுதான், கோவா பயணம் செய்ததற்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்று ராஜூ என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 ”நடிகை முமைத்கான் மூன்று நாள் பயணமாக கோவாவுக்குச் செல்ல எனது காரை வாடகை எடுத்தார். ஆனால், எட்டு நாட்கள் கோவாவில் தங்கியும் எனக்கு தரவேண்டிய 15 ஆயிரம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்” என்று கூறியதோடு முமைத்கானின் கோவா முகவரி, சுங்கக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகளை வெளியிட்டுள்ளார் ராஜூ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com