\
”எங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிறோம்; திருமணம் நடைபெறாது": நடிகை மெஹ்ரீன் அறிவிப்பு

”எங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிறோம்; திருமணம் நடைபெறாது": நடிகை மெஹ்ரீன் அறிவிப்பு

”எங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிறோம்; திருமணம் நடைபெறாது": நடிகை மெஹ்ரீன் அறிவிப்பு
Published on: 

சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை மெஹ்ரீன் பிர்சாதா ‘தனது திருமணம் நடைபெறாது’ என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. அதனைத்தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் ‘நோட்டா’, தனுஷின் ‘பட்டாஸ்’ படங்களில் ஹீரோயினாக நடித்த மெஹ்ரீன் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பாவ்யா பிஷ்னோய்யுடன் காதலில் இருந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர்களின் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. ’விரைவில் திருமணத் தேதியை அறிவிப்பேன்’ என்று மெஹ்ரீன் கூறியிருந்த நிலையில்,  தற்போது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதோடு திருமணத்தையும் நிறுத்துவதாக ட்விட்டரில் அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில்,  “நானும் பாவ்யாவும் எங்களுடைய நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம். இனி இந்த உறவை திருமணம் வரை கொண்டு செல்ல மாட்டேன். நானும் பாவ்யாவும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் புரிதலோடு நட்புடன்தான் இம்முடிவை எடுத்திருக்கிறோம். பாவ்யாவுடனும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் இனி எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன். எதிர்காலத்தில் என் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார். தற்போது, ’எஃப் 3’ என்ற தெலுங்கு படத்தில் மெஹ்ரீன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com