ஆண்களை குப்பை என்பதா? நடிகை வீடு முற்றுகை

ஆண்களை குப்பை என்பதா? நடிகை வீடு முற்றுகை

ஆண்களை குப்பை என்பதா? நடிகை வீடு முற்றுகை
Published on


தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது ’ஜிண்டா’ என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். முசாஞ்சே மகேஷ் இயக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. 
இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் மேக்னா, ஆண்களை கடுமையாகப் பேசுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் சில கன்னட அமைப்பினர் பெங்களூரில் நடிகை மேக்னாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். படத்தில், ஆண்களை குப்பை என்று கூறும் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும், மேக்னா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். வீட்டை விட்டு வெளியே வந்த மேக்னா, ‘அது படத்தில் உள்ள வசனம். கதைக்கு தேவை என்பதால் அது இருக்கிறது. முழுப்படத்தையும் பார்த்தால்தான் உங்களுக்கு புரியும்’ என்றார். இதை அவர்கள் ஏற்கவில்லை. கோஷம் எழுப்பினர். அங்கு வந்த போலீசார் முற்றுகையிட்டவர்களை அப்புறப்படுத்தினர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com