தமிழில், ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மேக்னா நாயுடு. குட்டி, வாடா, சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள இவருக்கு மும்பையில் நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இதுபற்றி மேக்னா நாயுடு கூறும்போது, ’எனது முதுகில் சிறுகட்டி ஒன்று இருந்தது. வலி ஏதும் இல்லாததால் அதைக் கண்டுகொள்ளவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகிவிட்டது. சமீபத்தில் வலி எடுக்க ஆரம்பித்ததால் டாக்டரிடம் பரிசோதனை செய்தேன். அதை ஆபரேஷன் மூலம் நீக்கினால்தான் நல்லது என்று சொன்னார். சரி என்றேன். இப்போது ஆபரேஷன் மூலம் கட்டி நீக்கப்பட்டு விட்டது. தையல் போடப்பட்டிருப்பதால் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்’ என்றார்.