ஐபிஎல் அப்டேட் கொடுக்கும் நடிகை மீரா நந்தன்

ஐபிஎல் அப்டேட் கொடுக்கும் நடிகை மீரா நந்தன்
ஐபிஎல் அப்டேட் கொடுக்கும் நடிகை மீரா நந்தன்

ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், நடிகை மீராநந்தன் கையில் பந்துடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள படம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஐபிஎல் போட்டியின் தகவல்களை துபாயில் இருந்து ஒளிபரப்பாகும் மலையாள பண்பலை வானொலியில் மீரா நந்தன் வழங்கவுள்ளார்.

தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். கடந்த 2017ம் ஆண்டு கோல்டு காய்ன் என்ற படத்தில் நடித்த அவர், பின்னர் நடிக்கவில்லை. நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு துபாயில் உள்ள மலையாள கோல்ட் பண்பலையில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிவருகிறார்.

துபாயில் இருந்து அடிக்கடி அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிட்டுவருகிறார். தற்போது அவர், கையில் பந்துடன் தரையில் அமர்ந்தபடி உள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. "ஐபிஎல் போட்டிகளின் அப்டேட் தகவல்களுக்கு மறந்துடாதீங்க. கோல்ட் பண்பலை வானொலியைக் கேளுங்க" என்றும் மீராநந்தன் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com