'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா!

'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா!

'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா!
Published on

ரஜினிகாந்தை அற்புதமான பரிணாமத்தில் பார்க்க மக்களைப்போல தானும் ஆர்வமாக இருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை மீனா, நடிகர் ரஜினிகாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அரசியலில் ரஜினி சாதிப்பார் என மறைமுகமாக தெரிவித்தார். அதில்,

''ரஜினியிடம் எத்தனையோ கதாநாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் நான் பேபி மீனாவாக இருந்தது முதல் அவருடன் பேசி இருக்கிறேன். பழகி, நடித்து இருக்கிறேன். அதற்கான வாய்ப்பு இன்று வரை தொடர்ந்து இருக்கிறது. இது எனக்கு பெருமை. என் பாக்கியம். ரஜியினியின் 168 வது படத்தில் இணைந்து நடிக்கப் போகிறேன். 

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்ன ரஜினிகாந்த் இன்று வரை மாறாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் சிறுவயதில் பார்த்த ரஜினிபோலவே இன்றும் பேசுகிறார், பழகுகிறார். ரஜினிகாந்த் போன்ற ஒரு மனிதரை வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்தது இல்லை. பார்க்கவும் முடியாதது என்று நினைக்கிறேன்.

ரஜினியை ஒரு நல்ல நடிகராக நாம் பார்த்திருக்கிறோம். சூப்பர் ஸ்டாராக பார்த்திருக்கிறோம். இன்னும் அதைவிட அற்புதமான பரிணாமத்தில் பார்க்க நானும் மக்களைப்போல ஆர்வமாக இருக்கிறேன். ஆசையாக இருக்கிறேன். கூடிய சீக்கிரம் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்'' என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com