சினிமா
நடிகை மந்திரா பேடியின் கணவரும் திரைப்பட இயக்குநருமான ராஜ் கௌஷல் திடீர் மரணம்
நடிகை மந்திரா பேடியின் கணவரும் திரைப்பட இயக்குநருமான ராஜ் கௌஷல் திடீர் மரணம்
நடிகை மந்திரா பேடியின் கணவரும் திரைப்பட இயக்குநருமான ராஜ் கௌஷல் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 50.
மன்மதன், சாஹோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ் கௌஷலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்நிலையில் இன்று (ஜூன் 30) அதிகாலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ராஜ் கௌஷல் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மந்திரா பேடி-ராஜ் கௌஷல் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். தன் மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.