’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ - மாளவிகா மோகனனின் க்யூட் போட்டோஷூட்!

’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ - மாளவிகா மோகனனின் க்யூட் போட்டோஷூட்!
’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ - மாளவிகா மோகனனின் க்யூட் போட்டோஷூட்!

கையில் ரோஜாக்களுடன் மாளவிகா மோகனனின் க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள மாளவிகா மோகனன் தற்போது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் ’தனுஷ் 43’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு, பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வோக் இந்தியா அட்டைப்படத்தில் மார்டன் லுக்கில் இடம்பெற்ற மாளவிகா மோகனனின் புகைப்படம் ’வாவ்’ ரகம்.

கடந்த 2019 ஆம் ஆண்டுதான் ரஜினியின் ’பேட்ட’ படத்தில் பூங்கொடியாக தமிழில் அறிமுகமானர் மாளவிகா மோகனன். தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், இவர் போட்டோ ஷூட் செய்யும் ஹாட் புகைப்படங்கள்தான்.

எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரத்திற்கு இரண்டு மூன்று போட்டோ ஷூட்கள் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இதனாலேயே, 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்பற்றி ஹார்ட்டின்களைக் குவிக்கிறார்கள்.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களால் நிரம்பி வழியும் மாளவிகா மோகனனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சமீபத்தில் புடவையில் கையில் ரோஜா பூக்களுடன் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் “பூக்களே சற்று ஓய்வெடுங்கள். அவள் வந்துவிட்டாள்” என்று புகைப்படத்தை பகிர்ந்து பாட்டாவே பாட ஆரம்பித்து தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com