சினிமா
பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கடித்தது ஏன்? காமெடி மதுமிதா விளக்கம்
பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கடித்தது ஏன்? காமெடி மதுமிதா விளக்கம்
பக்கத்து வீட்டு பெண்ணை கடித்தது தொடர்பாக நகைச்சுவை நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா என்பவருடன் பிரச்னை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். குடியிருப்பில் உள்ள ஒருவர் குறித்து மற்றொருவரிடம் தவறாக கூறியதாகவும், இதனையறிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை பெரிதானதாகவும் குறிப்பிட்டுள்ளார். உஷாவின் தொல்லையை ஒருமாதக் காலமாக பொறுத்துக்கொண்ட நிலையில், தான் லேசாக கடித்த இடத்தில் அவர் குத்தி குத்தி பெரிதாக்கியதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.