"மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள் மேகம்"- கீர்த்தி சுரேஷின் கவனம் ஈர்க்கும் போட்டோஷூட்

"மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள் மேகம்"- கீர்த்தி சுரேஷின் கவனம் ஈர்க்கும் போட்டோஷூட்
"மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள் மேகம்"- கீர்த்தி சுரேஷின் கவனம் ஈர்க்கும் போட்டோஷூட்

மஞ்சளில்  ’ஏஞ்சல்’ என்று சொல்லும்படி செம்ம்ம்ம்ம்ம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட் லக் சகி’, தமிழில் ’சாணிக்காயிதம், ‘அண்ணாத்த’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. மேலும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 66’ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து ஆக்டிவாக இருப்பவர்.

குறிப்பாக, தனது செல்ல நாயுடன் இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஹார்ட்டின்களை தெறிக்கவிடுவார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில், ’மஞ்சள் மேகம்’என்று சொல்லும் அளவுக்கு மஞ்சள் நிற ஸ்டைலிஷ் புடவை காஸ்டியூமில் கீர்த்தி சுரேஷ் கவனம் ஈர்க்கிறார்.இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com