
சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் புதிய படத்திற்கு நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலா இயக்கத்தில் ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘அவன் இவன்’ (ஒரு காட்சியில்) படங்களில் சூர்யா நடித்திருக்கிறார். சூர்யா தயாரிப்பில் முதன் முறையாக பாலா படம் இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவே காதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின், அதிகாரபூர்வ அறிவிப்பு நடிகர் சிவக்குமாரின் பிறந்தநாளையொட்டி சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே,நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் இணைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.