“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி

“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி

“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி
Published on

வனிதா வம்புக்கு இழுத்தால் தான் சண்டை போட மாட்டேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தனியார் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின்போது, நடிகை கஸ்தூரி, நடிகை வனிதா விஜயகுமாரை, வாத்து என்று கூறியிருந்தார். இது இருவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இருவரும் வெளியேறிவிட்டாலும் பிரச்னை மட்டும் தீரவில்லை. சமூக வலைத்தளங்களில் இவர்களின் வார்த்தைப் போர் வெடித்தது.

இந்த மோதல் உச்சக்கட்டத்துக்கு சென்றுகொண்டிருந்ததால், ரசிகர்களும் ’நீங்க சொல்வது சரி, அவங்க சொல்வது தவறு’ என்ற ரீதியில் இருவரையும் உசுப்பிக் கொண்டிருந்தனர். இதனிடையே வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ’வாயை மூடு, பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோதும் சரி, வெளியிலும் சரி, உனக்கு அறிவே கிடையாது. நல்ல விளைவுகளுக்காக நான் உன்னை பிளாக் பண்ணுகிறேன்’ என்று பதிவிட்டு கஸ்தூரியை ப்ளாக் செய்தார்.

இந்நிலையில் வனிதா வம்புக்கு இழுத்தால் தான் சண்டை போட மாட்டேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்.  அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com