வாவ்வ்வ்வ்...! கருணாஸ் - கிரேஸ் தம்பதியின் கலக்கல் போட்டோ ஷூட்!

வாவ்வ்வ்வ்...! கருணாஸ் - கிரேஸ் தம்பதியின் கலக்கல் போட்டோ ஷூட்!
வாவ்வ்வ்வ்...! கருணாஸ் - கிரேஸ் தம்பதியின் கலக்கல் போட்டோ ஷூட்!

நடிகர் கருணாஸ் மற்றும் அவரது மனைவி கிரேஸின் புதிய போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத்திறமையால் பல்வேறு தளங்களில் பயணிப்பவர் நடிகர் கருணாஸ். இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ’நந்தா’ படத்தின் மூலம் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, காதல் அழிவதில்லை, வில்லன், புதிய கீதை, திருமலை, பிதாமகன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நண்பராக வந்து தமிழின் முன்னணி காமெடி நடிகரானார்.

மேலும், ’திண்டுக்கல் சாரதி’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்து அடுத்தடுத்த படங்களில் திறமையை வெளிப்படுத்தினார். ராஜாதி ராஜா, அம்பாசமுத்திரம் அம்பானி, காசேதான் கடவுளடா படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு ’முக்குலத்தோர் புலிப்படை’ அமைப்பையும் ஏற்படுத்தி, கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

இவரது மனைவி கிரேஸ் கருணாஸும் பாடகிதான். இருவரும் மேடைப் பாடகர்களாக இருந்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

அரசியல்வாதியான பிறகும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார் கருணாஸ். கொரோனா பாதிப்பில் கூட மேடைக் கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து பாராட்டுக்களை குவித்தார். சமீபத்தில்தான், வெள்ளை தாடியுடன்  சாமியார் கெட்டப்பில் ’சசிகலா வெளியானதும் அவருக்கு அரணாய் திகழ்வோம்’ என்று ஸ்டேட்மெண்ட் விட்டு பரபரப்பு கிளப்பினார்.

இந்நிலையில், கருணாஸ் அவரது மனைவி கிரேஸுடன் கருப்பு நிற கோட் ஷூட்டில் நீண்ட தாடியுன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கருப்பு நிற கோட் ஷூட்டில் கருணாஸின் தாடியும் மீசையும் பார்ப்பதற்கு அப்படியே காரல் மார்க்ஸை நினைவுப்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com