ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய கங்கனா: புகைப்படத் தொகுப்பு
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவி’ படம் வரும் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கி முடித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் கொடுத்தது.
இந்நிலையில் திரையரங்குகளை திறக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், செப்டம்பர் 10/ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’தலைவி’ படம் வெளியாகிறது.
இந்த நிலையில், இன்று படத்தின் புரொமொஷனுக்காக சென்னை வந்துள்ள நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
அவருடன், இயக்குநர் ஏ.எல் விஜய்யும் மரியாதை செலுத்தினார். அவற்றின் புகைப்படத்தொகுப்பு இதோ: