\
காஜல் அகர்வால், யோகி பாபுவின் ‘கோஸ்டி’ படப்பிடிப்பு நிறைவு

காஜல் அகர்வால், யோகி பாபுவின் ‘கோஸ்டி’ படப்பிடிப்பு நிறைவு

காஜல் அகர்வால், யோகி பாபுவின் ‘கோஸ்டி’ படப்பிடிப்பு நிறைவு
Published on

நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' திரைப்படங்களை இயக்கிய கல்யாண் தற்போது காஜல் அகர்வால் நடிப்பில் புதிய ’கோஸ்டி’ படத்தை இயக்கியுள்ளார்.

தன்னுடைய முதல் இரண்டு திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார் கல்யாண். அதேபோல், நாயகிகளை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். அந்த பாணியிலேயே 'கோஷ்டி' திரைப்படத்தையும் உருவாக்கி வருகிறார். இப்படத்தில், கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, லிவிங்ஸ்டன், ஊர்வசி உள்ளிட்டவர்கள் பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் அனைத்து வசன காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் ஒரு புரோமோ பாடல் மட்டும், கோவிட் பொதுமுடக்கத்தால், படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதித்த பின்னர், படக்குழு அரசு அறிவித்துள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் கடைபிடித்து, படத்தின் புரோமோ பாடலை படமாக்கி முடித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com