ஊரடங்கு நேரத்தில் பாகவதம் - காஜல் அகர்வாலின் ஆன்மிகப் பக்கம்!!
இந்த ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்களுக்குப் பிடித்த பாதைகளில் பயணம் செய்துவருகிறார்கள். சிலருக்கு கேம்ஸ், சிலருக்கு படிப்பு, சிலருக்கு சமையல் என ஆசைப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.
பகவத்கீதையும் ஸ்ரீமத் பாகவதமும் படித்துவருவதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அந்தப் பதிவில், “நான் பகவத் கீதை மற்றும் பாகவதத்தை ஊரடங்கு நாட்களில் கேட்டுவருகிறேன். இந்தக் கதைகள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். என் கவனத்தை ஈர்ப்பவை. கடைசியாக மதிப்புமிக்க பாடங்களைக் கண்டிபிடிப்பதற்கான நேரத்தை என்னால் கண்டுபிடிக்கமுடிந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேறொரு டிவிட்டர் பதிவில், நம்முடைய குறைகளைப் புரிந்துகொள்வதும் ஒப்புக்கொள்வதும் நம்மை மாற்றிக்கொள்வதற்கான முதல்படியாகும். ஓர் அழகிய கிருஷ்ணாலீலா மூலம், பொறாமை ஏன் ஆரோக்கியமற்றது என்பதையும், பொறாமையின் இதயங்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார்.