தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!
Published on

’கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்’ என்று சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா, எந்த மருத்துவமனையை குறிப்பிட்டு சொன்னாரோ அதே, தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருக்கிறார்.

இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சூரி நடிக்கும் படத்தின் படபிடிப்பு தஞ்சை அரசு மருத்துவமனையில் நடந்தபோது,  ’மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு மோசமாக இருந்தது’ இருந்தது என்று கருத்து தெரிவித்திருந்தார் நடிகை ஜோதிகா. “மருத்துவமனையில் நான் பார்த்தவற்றை என் வாயால் கூட சொல்ல முடியாது. எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க. பெயிண்ட் அடிக்கிறீங்க. உதவி செய்றீங்க. அதேமாதிரி அரசு மருத்துவமனைகளுக்கும் அரசுப் பள்ளிக்கும் செய்யுங்கள்” என்று தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியிருந்தார். இதற்கு, சில சார்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஜோதிகாவின் மதத்தையும் விமர்சித்தார்கள்.

ஆனால், மனைவியின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கைவிட்டு அனைவரையும் ஆஃப் செய்தார் நடிகர் சூர்யா. இந்நிலையில், ஜோதிகா 25 லட்சம் நிதியுதவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு உதவ நன்கொடையாக வழங்கி இருப்பது பாராட்டுகளைக் குவித்துள்ளது. இத்தகவலை இயக்குநர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com