அந்த கெட்டவார்த்தை இங்க சகஜமா புழங்குதே: ஜோதிகா
’நாச்சியார்’ டீசரில் நான் பேசியது கெட்டவார்த்தைதான். ஆனால் அந்த வார்த்தை இங்கே சகஜமாக புழங்குகிறது’ என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம், ’நாச்சியார்’. இந்தப் படத்தின் டீசரில் ஜோதிகா பேசிய வசனம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இதுபற்றி ஜோதிகா கூறும்போது, ’நாச்சியார்’ டீசரில் நான் பேசியது கெட்டவார்த்தைதான். நான் அதை மறுக்கலை. ஆனால் அந்த வார்த்தை இங்கே சகஜமா புழங்குது. நிறைய படங்கள்ல, நிறைய ஆண்கள் அதை பேசியிருக்காங்க. ஒரு பெண் முதன்முறையா பேசறதாலா, விவாதம் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன். தவிர ’நாச்சியார்’ போல்டான போலீஸ் கேரக்டர். அது அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான வசனம். அந்த சீன்ல இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் ரொம்பவே கன்வின்ஸிங்காதான் பேசியிருக்கேன். ஏன்னா, அது கதையின் ஒரு பகுதி. பொருத்தமான ஒரு இடத்தில் அந்த வசனம் வரும். படம் பார்க்கும்போது ரசிகர்கள் இருநூறு சதவிகிதம் கன்வின்ஸ் ஆகிடுவாங்கன்னு நம்பறேன்’ என்று கூறியுள்ளார்.