\
actress ileana
actress ileanaileana_official

"Coming soon.." - கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் பிரபல பாலிவுட் நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து மழை!

தான் கருத்தரிப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோவுடன் நடிகை இலியானா பதிவிட்டது நெட்டிசன்களை அசர வைத்திருக்கிறது.
Published on: 

தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழி சினிமா துறைகளிலும் கலக்கி வந்த நடிகை இலியானா தான் கருத்தரிப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோவுடன் வெளியிட்டதும் நெட்டிசன்களை அசர வைத்திருக்கிறது.

இலியானாவின் இன்ஸ்டா பதிவில், “ஆக, அந்த சாகச பயணம் தொடங்கிவிட்டது” என்ற வாசகத்துடனான டி-ஷர்ட்டையும், “Mama" எனக் குறிப்பிட்ட டாலர் செயினை அணிந்தபடியும் உள்ள ஃபோட்டோ பகிரப்பட்டிருக்கிறது. மேலும், கேப்ஷனில் “உன்னை எப்போ காண போகிறேன் என ஆவலோடு காத்திருக்கிறேன் குட்டி டார்லிங்” என்றும் இலியானா குறிப்பிட்டிருக்கிறார்.

தான் கர்ப்பமாக இருப்பதைதான் இப்படி இலைமறை காயாக இலியானா அறிவித்திருக்கிறார் என பலரும் புரிந்துகொண்டு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள். அதேவேளையில் இலியானாவின் கணவர் யார் என்றும் பலரும் ஆவலாக கேட்டு வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபோட்டோகிராஃபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்த இலியானா கடந்த 2019ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்துவிட்டதாக தெரிவித்தார்.

தற்போது பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் லாரென்ட் மைக்கேல் உடன் இலியானா காதல் உறவில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவல்களை ஊர்ஜிதமாக்கும் வகையில் கத்ரினா கைஃப், விக்கி கவுஷல் உடல் இலியானாவும் செபாஸ்டியனும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்திருந்தார்கள்.

இருப்பினும் பொதுவெளியில் இதுவரை தன்னுடைய கணவர் அல்லது காதலர் யார் என இலியானா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com