டெல்லியில் 100 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனை - காலா பட நடிகையின் முயற்சி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் குழந்தைகள் உரிமை குறித்து குரல் கொடுத்து வரும் சர்வதேச தன்னார்வ அமைப்புடன் இணைந்து நூறு படுக்க வசதி கொண்டு தற்காலிக மருத்துவமனையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்துள்ளார் நடிகை ஹியூமா குரேஷி. இவர் ரஜினியின் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தற்காலிக மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் கூட நிறுவப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் வழியாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் SAVE THE CHILDREN அமைப்புடன் இந்த முயற்சியை நான் முன்னெடுத்துள்ளேன். டெல்லியை மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என உறுதி ஏற்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

