சினிமா
“வெளிநாட்டவருக்காக போராடும் அப்பாவிகள் இந்தியர்கள்” - நடிகை ஆர்த்தி
“வெளிநாட்டவருக்காக போராடும் அப்பாவிகள் இந்தியர்கள்” - நடிகை ஆர்த்தி
வெளிநாட்டவருக்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம் கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் வாழ்வதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடமாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்று, கலவரங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலவரத்தை கட்டுக்குள் வைத்திருக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த போராட்டங்கள் தமிழகத்திலும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆர்த்தி, “உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம் கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம்” என தெரிவித்துள்ளார்.