“நடிகர் கார்த்தியால் நிரூபிக்க முடியுமா” - காயத்ரி ரகுராம் கேள்வி

“நடிகர் கார்த்தியால் நிரூபிக்க முடியுமா” - காயத்ரி ரகுராம் கேள்வி

“நடிகர் கார்த்தியால் நிரூபிக்க முடியுமா” - காயத்ரி ரகுராம் கேள்வி
Published on

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு விஷால் வந்தார் என கார்த்தியால் நிரூபிக்க முடியுமா என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியின் ஆதரவாளரும், நடிகையுமான காயத்ரி இதுகுறித்து பேசும்போது, “ பாண்டவர் அணியால் நாடகக் கலைஞர்கள் அதிகமாகவே கஷ்டப்பட்டுள்ளனர். அதனால் நிச்சயமாக சுவாமி சங்கரதாஸ் அணி வெற்றி பெறும்.

இப்போது திடீரென மனஸ்தாபம் ஏற்படவில்லை. நிறைய நாட்களாகவே அது இருக்கிறது. ஆனால் அதனை நாங்கள் வெளியே சொல்லவில்லை. தற்போது சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு வீட்டுச் சண்டை மாதிரி. அது அவ்வளவு எளிதில் வெளியே வராது. பாண்டவர் அணி செய்கின்ற தொடர் அராஜகத்தால் இப்போது வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

மலேசியா நிகழ்ச்சியில் கூட கலைஞர்களிடம் பாகுபாடு காட்டப்பட்டது. விஷால் அவருக்கான வேலையை சரிவர செய்யவில்லை. நாடக நடிகர்கள் யாரையும் கவனிக்கவில்லை. நடிகர் கார்த்தி தான் நேர்மையாக இருப்பதாக சொல்கிறார். அப்படியென்றால் தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு விஷால் வந்தார் என அவரால் நிரூபிக்க  முடியுமா..? அதுமட்டுமில்லை தேர்தல் தொடர்பான எந்தக் கூட்டங்கள் குறித்தும் அவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com