துபாயில் துஷாரா விஜயன்: ஸ்கை டைவிங் செய்து அசத்தல்

துபாயில் துஷாரா விஜயன்: ஸ்கை டைவிங் செய்து அசத்தல்
துபாயில் துஷாரா விஜயன்: ஸ்கை டைவிங் செய்து அசத்தல்

துபாயில் நடிகை துஷாரா விஜயன் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.

’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் இதயங்களை வாரிக்கொண்டார் நடிகை துஷாரா விஜயன். ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு யதார்த்தமான நடிப்பால் பாராட்டுக்களைக் குவித்தார் துஷாரா. தற்போது, பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, வசந்தபாலனின் ‘அநீதி’ உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்து வரும் துஷாரா விஜயன் துபாய் சென்றுள்ளார். அங்கு வானத்தில் சாகச விளையாட்டு எனப்படும் ஸ்கை டைவிங்கை பயமில்லாமல் விமானத்தில் இருந்து குதித்து தனது உடம்பில் மாரியம்மாவே புகுந்த மாதிரி வானத்தில் பறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, ”வானத்திலிருந்து பூமியைப் பார்ப்பது சொர்கத்தைப் பார்ப்பது போன்ற ஒரு உலக அனுபவம். உடல், மனம், மற்றும் ஆன்மாவிற்கு ஒரு முழுமையான புத்துணர்ச்சி கிடைத்தது. இவ்வளவு அழகான வழிகாட்டியாக இருந்ததற்காக எனது பயிற்றுனர்கள் குழுவிற்கு நன்றி. ஒவ்வொரு நொடியும் சொர்க்கத்தின் தருணங்களை உணர்ந்தேன், தரையிறங்கும்போது முழுமையான அமைதியை உணர்ந்தேன்” என்று மகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com