\
இரு குழந்தைகளின் தாயாக நடிப்பதில் தயக்கமில்லை.. தன்ஷிகா

இரு குழந்தைகளின் தாயாக நடிப்பதில் தயக்கமில்லை.. தன்ஷிகா

இரு குழந்தைகளின் தாயாக நடிப்பதில் தயக்கமில்லை.. தன்ஷிகா
Published on

இருகுழந்தைகளின் தாயாக நடிப்பதில் எந்த தயக்கமுமில்லை என நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார். 

கபாலி படத்தில் ரஜினியின் மகளாக கவனம் ஈர்த்த தன்ஷிகா, எங்க அம்மா ராணி படத்தில் இரு குழந்தைகளின் தாயாக நடித்து வருகிறார். இளையராஜா இசையில் உருவாகிவரும் இந்த படத்தினை பாணி இயக்கிவருகிறார். காதல் திருமணம் செய்துகொண்டு மலேசியாவுக்கு இடம் பெயரும் மதுரையைச் சேர்ந்த துளசி என்ற பெண் கதாபாத்திரத்தில் தன்ஷிகா இதில் நடித்துள்ளார். இரு குழந்தைகளின் தாயாக நடித்துவரும் தன்ஷிகா, கபால் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாணியிடம் கதை கேட்டதாகவும், அதுபிடித்துவிடவே உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com