போதையில் விபத்து ஏற்படுத்திய ஹீரோயின்: பெயர் குழப்பத்தால் தமிழ் நடிகை விளக்கம்!

போதையில் விபத்து ஏற்படுத்திய ஹீரோயின்: பெயர் குழப்பத்தால் தமிழ் நடிகை விளக்கம்!

போதையில் விபத்து ஏற்படுத்திய ஹீரோயின்: பெயர் குழப்பத்தால் தமிழ் நடிகை விளக்கம்!
Published on

போதையில் கார் ஓட்டிச் சென்ற நடிகை மீது விபத்து ஏற்படுத்தியதாகவும் போலீஸ் அதிகாரி யை தாக்கியதாகவும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

இந்தி சின்னத்திரை நடிகை ரிது சைலேந்திர சிங். மும்பையைச் சேர்ந்த இவர், தோழிகளுடன் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். நேற்று அதிகா லை 2 மணியளவில் போதையோடு தனது நண்பர்கள் ராகுல், ஸ்வப்னில் ஆகியோரோடு காரில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார் ருஹி. மூவரும் போதையில் இருந்தனர்.

கர் என்ற இடத்தில் உள்ள ரிங்க் ரோடு அருகே வந்தபோது, அங்கிருந்த பிரபலமான ரெஸ்ட்ரன்ட் அருகே வண்டியை நிறுத்தச் சொன்னார் தோழி. நிறுத்தினார் ருஹி. அப்போது தோழிக்கு அந்த ரெஸ்டாரன்டின் வாஷ்ரூமுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அந்த ரெஸ்டாரன்ட் மூடப்பட்டு விட்டதால் கதவைத் தட்டினார். திறந்த ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களை அவர்கள் கடுமையாகத் திட்டியதாகத் தெரிகிறது.

இதனால், ரெஸ்டாரன்ட் ஊழியர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார் அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு வந்து விட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுலும் ஸ்வப்னிலும் போலீஸ் அதிகாரியை தாக்கியதாகத் தெரிகிறது. போலீஸ் அதிகாரியின் சட்டையில் இருந்த பேட்ஜையும் அவர்கள் கிழித்து எறிந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ருஹியை அனுப்பி விட்டனர்.

ருஹி சிங், அங்கிருந்து போதையிலேயே கார் ஓட்டிச் சென்றார். பந்த்ரா அருகே வேகமாக வந்த அவர், சாலையில் நின்ற ஐந்து வாகனங் களின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் அந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதையடுத்து அந்த வாகனங்களின் உரிமையா ளர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ருஹி சிங்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அவர் அதிகமாக குடித்திருந்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ’அது நான் இல்லை’ என்று நடிகை ருஹி சிங் விளக்கம் அளித்துள்ளார். இந்த ருஹி சிங், இந்தியில் மதுர் பண்டார்கரின் ’காலண்டர் கேர்ள்ஸ்’, தமிழில் நட்டி ஜோடியாக ’போங்கு’ உட்பட பல படங்களில் நடித்தவர்.

‘மீடியாவும் சமூக வலைத்தளவாசிகளும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். போதையில் கார் ஓட்டி வாகனங்களைச் சேதப்படுத்தியது நான் அல்ல. அவர் வேறு நடிகை. உண்மை தெரியாமல் எனது புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம்’’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com