
நடிகை பிந்துமாதவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
பிந்துமாதவி ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் மரத்தின் மீது ஏறி நிற்பது தெரிகிறது. அது என்ன மரம் அவர் அங்கு என்ன செய்கிறார் என முதலில் புரியவில்லை. பிறகு அந்த ட்விட்டர் கருத்தை பார்த்த போது தான் விவரம் தெரிந்தது. பிந்து அவங்க அம்மாவிடம் முருங்கைக்காய் சாம்பார் கேட்டுள்ளார். அம்மாவும் போய் மரத்துல இருந்து பறித்து வரச் சொன்னாராம். அதனால அம்மணி மரத்துல ஏறி முருங்கக்காய் பறித்துள்ளார். சரி இத சும்மா பறிக்கிறதான்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். எடுத்த போட்டாவை என்ன செய்வது என்று ட்விட்டரில் பதிவுவிட்டுள்ளார். இதற்கு தான் பிந்துவின் ரசிகர்கள் கமண்ட்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.