
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும், பாடகியுமான பிடிஷா பெஸ்பரூபா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'ஜக்கா ஜசோஸ்' படத்தில் ரன்பீர் கபூருடன் இவர் நடித்திருந்தார். 30 வயதான இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். மும்பையில் வசித்து வந்த அவர் சமீபத்தில் குர்கானுக்கு குடியேறியுள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பிடிஷா பெஸ்பரூபாவின் செல்போனுக்கு அவரது தந்தை போன் செய்துள்ளார். வெகு நேரம் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது தந்தை, அங்குள்ள காவல்நிலையட்த்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பிடிஷா பெஸ்பரூபாவின் முகவரியை பெற்று அங்கு சென்ற காவலர்கள் பார்த்தபோது பிடிஷா பெஸ்பரூபா காற்றாடியில் துக்குமாட்டி இறந்தது தெரிய வந்தது. ஏற்கெனவே பிடிஷா பெஸ்பரூபாவுக்கும் அவரது கணவர் குடும்பத்திற்கும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிடிஷா பெஸ்பரூபாவின் ஃபேஸ்புக் பக்கத்தையும், செல்ஃபோனையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிஷா பெஸ்பரூபா முதுகலைப் பட்டம் பெற்றவர். மாஸ்கம்யூனிகேசன் (ஜர்னலிஸம்) பட்டமும் பெற்றவர்.