“இவங்க மட்டும் குறைஞ்ச வயசு நடிகை கூட ரொமான்ஸ் பண்ணலாம்.. ஆனா நாங்க..” - சரமாரியாக தாக்கிய பூமிகா!

ஹீரோ ஹீரோயின்களிடையேயான வயது வித்தியாசம் குறித்து நடிகை பூமிகா பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
Actress Bhumika
Actress BhumikaTwitter

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள 90களின் கனவு நாயகி பூமிகா, தற்போது பரபரப்பான கேள்வியொன்றை ஊடகங்கள் முன்னிலையில் எழுப்பியிருக்கிறார். அது திரையுலகத்தினரை அதிர வைத்திருக்கிறது.

தமிழில் பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் என பல படங்களில் ஹீரோயினாக வந்த பூமிகா அண்மைக் காலமாக தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளிலும் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் தற்போது அஜித்தின் வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என்ற சல்மான் கானின் படத்திலும் நடித்திருக்கிறார் பூமிகா.

Actress Bhumika
‘KisiKa Bhai KisiKi Jaan’.. ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் வசூல் எப்படி? அஜித்தை விஞ்சினாரா சல்மான்?

ரம்ஜானை முன்னிட்டு சல்மானின் இந்த படம் கடந்த ஏப்ரல் 21ல் வெளியான நிலையில் தற்போது ஹீரோ ஹீரோயின்களிடையேயான வயது வித்தியாசம் குறித்து நடிகை பூமிகா பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

பேட்டி ஒன்றில் பேசிய போது, “படங்களில் தங்களைவிட குறைந்த வயதுடைய ஹீரோயின்களுடன் ஆண் நடிகர்கள் ரொமான்ஸ் செய்யும் போது, அதையே நடிகைகளும் செய்யலாம். இதை படம் எடுப்பவர்களும் சரி... பார்ப்பவர்களும் சரி... ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கமெர்ஷியல் படங்களில் பெரும்பாலும் மூத்த நடிகைகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த வயது வித்தியாசம் வெப்சீரிஸ்களில் மாறி வந்தாலும், கமெர்ஷியல் படங்களில் இன்னமும் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. ஹீரோக்கள் இன்னமும் ஹீரோக்களாகவேதான் நடிக்கிறார்கள். ஆனால் நடிகைகள் புறந்தள்ளப்படுகிறார்கள்.

Actress Bhumika, Host Siddharth Kannan
Actress Bhumika, Host Siddharth Kannan@sidkannan, twitter

இந்த காலத்திலும் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதெல்லாம் நிஜ வாழ்க்கையில்கூட வயது குறைந்த ஆணை பெண் திருமணம் செய்துகொள்கிறார். அது மல்லிகா அரோரா - அர்ஜூர் கபூர் ஜோடியாக இருந்தாலும் சரி, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியாக இருந்தாலும் சரி. ஆனால் அவர்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதுதான் ஏன் என தெரியவில்லை. அது அவர்களது வாழ்க்கை. ஒரு ஆணால் வயது குறைந்த பெண்ணுடன் வாழ முடியுமானால், பெண்ணாலும் அது முடியும்.

அதேபோல, தன் பாதி வயதை உடைய நடிகையுடன் ஒருவரால் ரொமான்ஸ் செய்ய முடியுமானால், அது நடிகைக்கும் பொருந்தும். என் மகன் வயதை ஒத்த நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க என்னால் முடியும்” என அதிரடியாக கூறிவிட்டு சிரித்தபடியே சென்றுள்ளார் நடிகை பூமிகா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com