நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்தை ரகசியமாகவே நடத்த நினைத்தோம். ஆனால் வெளியில் கசிந்துவிட்டது என்று அவரது அம்மா புஷ்பா தெரிவித்தார்.
நடிகை பாவனாவும் கன்னடப் பட தயாரிப்பாளர் நவீனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதற்கு இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த வருடம் திருமணம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் பாவனாவில் தந்தை இறந்ததால், திருமணம் தள்ளிப் போனது.
இதற்கிடையே பாவனா, கடந்த சில நாட்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானார். அதிலிருந்து மீண்டு திரும்பவும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதையடுத்து பாவனா- நவீன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் திருச்சூரில் வியாழக்கிழமை நடந்தது. இதுபற்றி பாவனாவின் அம்மா கூறும்போது, ‘நிச்சயதார்தத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டோம். திருமணத்தை பெரிதாக நடத்திக்கொள்ள நினைத்திருந்தோம். அதற்குள் புகைப்படங்கள் கசிந்துவிட்டதால் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது’ என்றார்.