கேரளாவில் நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை பாவனாவிற்கு கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில்குமார், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விசாரிக்க கூட்டு விசாரணைக் குழுவை கேரள மாநில டிஜிபி அமைத்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், குற்றவாளிகள் ஒருவர் கூட தப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இரவில் கொச்சி திரும்பிய போது, நடிகை பாவனாவை அவரது காரிலேயே கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் 2 மணி நேரத்திற்கு பின்னர் அவரை விட்டு தப்பிச் சென்றனர்.