தயாரிப்பாளர் நவீனை கரம்பிடித்தார் நடிகை பாவனா

தயாரிப்பாளர் நவீனை கரம்பிடித்தார் நடிகை பாவனா

தயாரிப்பாளர் நவீனை கரம்பிடித்தார் நடிகை பாவனா
Published on

நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் கேரள மாநிலம் திருச்சூரில் இன்று காலை நடைபெற்றது. 

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துவருகிறார். இவரும் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பாவனா வீட்டில் எளிமையாக நடந்தது. 

நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் கேரள மாநிலம் திருச்சூரில் இன்று காலை நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்து முடிந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பாவனாவிற்கு ப்ரியங்கா சோப்ரா உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நவீனை கடந்த ஐந்து ஆண்டுகளாக பாவனா காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் நடைபெற்றது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com