\
ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணையும் நடிகை அஞ்சலி?

ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணையும் நடிகை அஞ்சலி?

ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணையும் நடிகை அஞ்சலி?
Published on

ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ராம் -நிவின் பாலி இணையும் புதிய படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். இதற்கான, அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் தயாரிக்கும் ‘நாயட்டு’ தெலுங்கு ரீமேக்கிலும் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகை அஞ்சலி ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறார். மற்றொரு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ராம் சரண் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com