actress andrea on pahalgam terror attack
பஹல்காம், ஆண்ட்ரியாஎக்ஸ் தளம்

”இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்புக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” - ஆண்ட்ரியா!

“மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” என ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
Published on

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். அதேநேரம், ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த நிலையில், “மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்க்கத்தில், “பஹல்காமிற்கு நானும் சுற்றுலா பயணியாக சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதே போல இந்த நிகழ்விற்கு பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளள காஷ்மீர் மக்களை நினைக்கையில், என் இதயம் உடைகிறது.

நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகத்திற்கு எதிரான வெறுப்பாக திசைதிருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை.

நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல, ஆனால், இந்தச் சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை, எனது பதிவின் பின்னூட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

actress andrea on pahalgam terror attack
”உன்னைக் கொல்லமாட்டேன்; போய் மோடியிடம் சொல்லு” - பஹல்காம் தாக்குதலில் கணவரை கண்முன்னே இழந்த பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com